பீதியை கிளப்பும் மத்திய அரசு..!!

பாதுகாப்புக் காரணம் கருதி, மாநில முதல்வர்கள், பிற மாநிலங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

large_central-governmen-37508இந்தியாவில் பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் ராஜீவ் குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் சிறப்புப் பாதுகாப்புப் படை(SPG).

காவலுக்கு அடுத்தபடியாக தேசிய பாதுகாப்புப் படையினரைக் (NSG) கொண்டு வழங்கப்படும் இந்தியாவின் இரண்டாம் நிலைப் பாதுகாப் பாகும்.

இன்றைய நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 17 பேருக்கு மட்டுமே இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இவர்களின் உயிருக்கான அச்சுறுத்தல் அளவிட முடியாது. ஆனாலும்கூட, இவர்களில் பலருக்கு வழங்கப்படும் இஸட் பிளஸ் பாதுகாப்பைத் திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு 22 பேர் கொண்ட இஸட் பிரிவு பாதுகாப்பும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 பேர் கொண்ட ஒய் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

மேலும், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் “இசட்’ அல்லது “இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு மாநில முதல்வர், மற்றொரு மாநிலத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது, அந்த மாநில அரசின் கடமையாகும்.

இந்த நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வர், மற்றொரு மாநில அரசிடம் தெரிவிக்காமல், அந்த மாநிலத்துக்குச் செல்லும்போது, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் ஏற்படும்.

எனவே, தங்கள் பயணத் திட்ட விவரங்களை அவர்கள், பிற மாநில அரசுகளிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டியது அவசியம்.