மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

வடக்கில் அரச பேருந்து சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதையடுத்து, புதிய ஆண்டிற்கான கற்றல் செயற்பாடுகள் பாடசாலைகளில் ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

426_5அந்த வகையில் வட மாகாணத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களை கட்டணம் இன்றி தனியார் பேருந்துகள் இலவசமாக ஏற்றிச் செல்லும் என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சேவையானது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச பேருந்து சேவையாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வரையில் முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரச பேருந்து சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பால் பயணிகளின் போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்படாத வகையில் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.