பிரபலம் விரித்த வலை..! தெரியாமல் சிக்கிய ரஜினி..!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா..? வரமாட்டாரா..? என்று பல வருடங்களாகவே தமிழக ஊடகங்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தன.

இந்த நிலையில்., அரசியலில் ஈடுபட போவதாக ரஜினி அறிவித்துள்ளார். ரசிகர்களை ஒருங்கிணைப்பதற்காக செயலி ஒன்றையும் ரஜினி அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதற்கெல்லாம் காரணம்., ட்விட்டரில் மட்டும் அரசியல் பேசிக்கொண்டிருந்த கமல்தான் என்று கூறப்படுகிறது.

சில நாட்கள் தமிழக ஊடகங்கள் கமல் பதிவிடும் ட்விட்டர் பதிவுகளை பெரிதாக்கி., விவாதங்கள் நடத்தி வந்தன.

ஒரே ஒரு நாள்., எண்ணூர் பகுதிக்கு சென்ற கமல்., அங்கு சாம்பல் கழிவுகளினால் ஏற்பட்டிருந்த பாதிப்புகளை பார்வையிட்டார்.

அதனை நேரடி ஒளிபரப்பு செய்த தமிழக ஊடகங்கள்., கமல் மக்கள் பிரச்சனையை தீர்க்க களம் இறங்கிவிட்டார் என்று செய்திகள் வெளியிட்டன.

அதன் பிறகு., விசில் என்கின்ற செயலியை கமல் அறிமுகப்படுத்தினார். அதையும் ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. அந்த செயலியை எதற்கு அறிமுகப்படுத்தினார் என்று இதுவரை தெரியவில்லை..?

இந்த சூழ்நிலையில்., சென்னையில் பெய்த மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஓகி புயலால் மக்கள் துன்பத்திற்கு ஆளானார்கள்.

பல மீனவர்கள் காணாமல் போனார்கள். கடலில் பலர் இறந்து மிதந்தார்கள். இந்த பிரச்சனைகளை பற்றி கமல் வாய் திறக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார். இதையும் தமிழக ஊடகங்கள் தூக்கி பிடிக்கின்றன.

ரஜினியை அரசியல் களத்தில் தள்ளிவிட்டு கமல் எஸ்கேப் ஆகிவிட்டார். இன்னும் எத்தனை பேரிடம் தமிழக மக்கள் ஏமாற போகிறார்களோ தெரியவில்லை..?

தமிழகத்தின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் .., நடிகர்கள் மட்டும் இல்லை., அவர்களை தூக்கி பிடிக்கும் தமிழக ஊடகங்களும்தான்.