யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியை சேர்ந்த 23 வயதான ரவிராஜ் மற்றும் 33 வயதான க்ரைன்சன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.நேற்று மாலை குறித்த இருவரும் மணியம் தோட்டம் பகுதியில் வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது கொழும்புத்துறை சந்திக்கு அண்மையில் வீதியில் காணப்பட்ட வேகட்டுப்பாட்டில் வேகமாக செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து இருவரையும் தூக்கி வீசியுள்ளது.இதனால், அருகில் இருந்த சுவர் ஒன்றுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.