இந்து முறைப்படி திருமணம் செய்த ஜப்பானிய ஜோடி!

ஜப்பானைச் சேர்ந்த ஜோடி மதுரையில் இந்து முறைப்படி பட்டு புடவை, வேட்டி அணிந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜிகாரு ஒபடா என்ற பெண்ணுக்கும் அவரது காதலன் யூடோ நினாகாவிற்கும் மதுரையில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. பட்டுப்புடவை மற்றும் வேட்டி கட்டி தமிழ் பண்பாட்டின் படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Japan couple marrige 2  பட்டுப்புடவை, வேட்டி அணிந்து மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்த ஜப்பானிய ஜோடி- (வீடியோ) Japan couple marrige 2இது குறித்து மணப்பெண் ஜிகாரு கூறுகையில், ‘தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழிலுள்ள எல்லா விஷயங்களும் எனக்கு பிடிக்கும். அதனால் தான் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய விரும்பினேன்’ என கூறினார்.

மதுரையைச் சேர்ந்த வினோதினி ஜப்பானில் வேலைப்பார்த்து வருகிறார்.

Japan couple marrige  பட்டுப்புடவை, வேட்டி அணிந்து மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்த ஜப்பானிய ஜோடி- (வீடியோ) Japan couple marrigeஅவரின் மூலமாக ஜிஜாரு இந்த திருமணத்தை செய்ய முடிவு செய்தார். இந்து முறைப்படி ஓமகுண்டம் வளர்த்து மந்திரங்கள் கூறி ஜிகாருவின் திருமணம் மிக சிறப்பாக நடந்தது. யூரோ ஜிஜாருவின் கழுத்தில் தாலி கட்டினார்.

மணமகன் யூடோ கூறுகையில், ‘வேட்டி அணிவது எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

625.0.560.320.160.600.053.800.700.160.90  பட்டுப்புடவை, வேட்டி அணிந்து மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்த ஜப்பானிய ஜோடி- (வீடியோ) 625நான் வேட்டி அணிந்திருப்பதை தமிழ் படங்களில் பார்த்திருக்கிறேன்’ என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.