நீர்வேலி அத்தியாயர் இந்துக் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனத் தெரிய வருகிறது.
முச்சக்கர வண்டியும் கயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது.
விபத்தில் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர். அவர்களில் 5 வயதுச் சிறுமியும் உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.