2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தம்புள்ளை வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
தம்புள்ளை, பஹல ஹெரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதாகிய பியானி மலிகா என்ற பெண்ணே மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இவருக்கு பிறந்த 3 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 குழந்தைகளும், தாயும் உடல் நலத்துடன் இருப்பதாக தம்புள்ளை வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
மேலும், கடந்த வருடம் ஆரம்பத்தில் கண்டி ஆதார வைத்தியசாலையில் பெண் ஒருவர் நான்கு குழந்தைகளை ஈன்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.