தனியார் சேனலுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் கூறியது பின்வருமாறு,
பேட்டியில் கேட்கபட்ட கேள்வி; பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வதற்கு தயாராக இருக்கிறீர்களா?
தினகரன் கூறியது,
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பிடிக்காத நபர்கள் என்றால் சசிகலா, தினகரன் தான் ..அதனால் எங்களோடு அவர்கள் இணைய மாட்டார்கள், அது நடைபெறாத ஒன்று என்று குறிப்பிட்டார்.
பாஜகவே வந்து எங்களை அழைத்தாலும் நாங்கள் அங்கு போக மாட்டோம்,பாஜகவுடன் எந்த காலத்திலும் ஒட்டோ உறவோ கிடையாது..
நான்அரசியலில் இருக்கும் வரை அது நடக்காது, நான் அரசியலில் இருக்கும் காலம் வரை மதச்சார்பற்ற அணியில்தான் இருப்பேன் அது எப்போதும் உறுதி
மக்கள் மத்தியில்மதவாதத்தையும் ஜாதியவாதத்தையும் பேசுவது குற்றம் என்று சாட்டிய டிடிவி தினகரன், ஒரு எடுத்துகாட்டையும் கூறினார்..
நடிகர் விஜய்யை நாம் கிறிஸ்தவர் என்றா பார்க்கிறோம்? ஜாதியைப் பார்த்தா நடிகர்கள் பின்னால் செல்கிறோம்? எம்ஜிஆர், ரஜினிகாந்தை என்னஜாதி என்றா பார்த்தோம்..?பிறகு இங்கு எப்படி வந்தது ஜாதி..?
குருமூர்த்தி பற்றி,..?
ஸ்டெர்லிங் சிவசங்கரன் என்பவரின் அழைப்பு பேரில், லீலாபேலஸ் ஸ்டார் ஹோட்டலில் 2017 ஜனவரி 8-ஆம் தேதி ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தேன் என்று கூறியதினகரன்,
அப்போது, குருமூர்த்தி தனக்கு பல்வேறு கட்டளைகளை பிறப்பித்ததாகவும், அதற்கு நாங்கள்எங்கள் கட்சியில் கறுப்பு சட்டை போடவேண்டுமா.? காலையில் இட்லி சாப்பிட வேண்டுமா..? என்பதையெல்லாம் நீங்க சொல்ல வேண்டாம் என்று முகத்திற்கு நேராகவே கூறிவிட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்
மேலும், தங்கமணி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், குருமூர்த்தியை சந்தித்ததும், குருமூர்த்தி டெல்லி அரசின் ஏஜென்ட் இருக்கிறார் என்பதும் மிகவும் லேட்டாக பின்னரே தனக்கு தெரியவந்தது என்றும் தினகரன் குறிப்பிட்டார்.
திமுக..?
மேலும் திமுக டெபாசிட் வாங்காதது தனக்கும் வருத்தம்தான் என்றும் கூறியுள்ளார்..மேலும் அதிமுக கோல்மால்களை செய்து டெபாசிட் வாங்கிவிட்டது என்றும் கூறியுள்ளார்.