பஷில் ராஜபக்ஷ பூசல்களை ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர்..

ஒன்றிணைந்த எதிரணிக்குள், பஷில் ராஜபக்ஷ உட்பூசல்களைத் தோற்றுவித்தார் எனவும், இதனால், தான் உள்ளிட்ட பலர் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியிலும் பஷில் ராஜபக்ஷ உட்பூசல்களைத் தோற்றுவித்ததாகவும், இதனூடாக பலருக்கு அநியாயங்கள் இடம்பெற்றதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள பலர் ஏகாதிபதிகளாக செயற்படுவதால் இந்த முறையின் கீழ் மக்களுக்கு தேவையானதை நிறைவேற்ற முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Basil