கடன் சுமை காரணமாக கணவன் மனைவி தற்கொலை!

யாழ்ப்பாணம் கைதடி நவபுரம் பகுதியில் கடன் சுமை தாங்கமுடியாமல் கணவன் மனைவி ஆகிய இருவர் தற்கொலை செய்துள்ளனர். குறித்த இருவரும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கைதடி கிழக்கு நவபுரம் பகுதியில் வசித்துவரும் 67 வயதுடைய சின்னையா வேலாயுதம் 62 வயதுடைய வேலாயுதம் நாகம்மா ஆகியோரே இவ்வாறு கடன் சுமைதாங்காமல் இன்றையதினம் காலை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளனர்.

இவர்களை மாலை வேளையில் இருந்து காணாத அயலவர்கள் சுற்றுப்புறங்களில் தேடியுள்ளனர். இதன்போது இவர்களின் சடலம் கிணற்றுக்குள் இருப்பதை அவதானித்தனர்.

இதன்பின் இது தொடர்பாக சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Capturecbgnvgn v