யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு முதன்முறையான சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த ஆறு வயதான ராஜ்குமார் தனுஸ்கா என்ற சிறுமி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், நீர்வேலியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிறுமி பலியாகி உள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முச்சக்கர வண்டியும் ஹையஸ் வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றது.
விபத்தையடுத்து சிறுமியும் சாரதியும் உணர்வற்ற நிலையில் காணப்பட்டனர். வீதியில் பயணித்தவர்கள் விரைந்து செயற்பட்டு பிறிதொரு வாகனத்தில் நால்வரையும் ஏற்றி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது சிறுமியும் சாரதியும் உயிரிந்து விட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஹையஸ் வாகன சாரதியான 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.