இறுதி சடங்கிற்கு பணத்தை வைத்துவிட்டு வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த மனோகரன் – ஜீவா தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வந்த நிலையில் மகன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மனோகரன் – ஜீவா தம்பதியினர் மகன் வெளியூர் சென்றிருந்தவேளையில் உடலில் மண்ணெண்ணெய் தீ வைத்து தற்கொலைய செய்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றியதுடன் வீட்டை சோதனை செய்ததில் இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் கடிதமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த கடிதத்தில் ‘எங்களது இறுதி சடங்கிற்காக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வைத்துள்ளோம். எங்களை எரித்து விடுங்கள்’ என எழுதப்பட்டிருந்தது.
அவர்களது தற்கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.