அமெரிக்காவில் வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், ஞாயிற்றுக்கிழமையன்று மரியா என்ற பெண் ஒருவர் பிரசவ வழியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அதன் பிறகு தான் அந்த குழந்தைகளின் பிறப்பில் உள்ள அதிசயத்தை மருத்துவர்கள் கண்காணித்துள்ளனர்.
அதாவது டிசம்பர் 31, 2017 அன்று இரவு 11.58 மணிக்கு ஜோகுயின் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனையடுத்து 20 நிமிட இடைவெளியில், ஐதான என்ற பெண் குழந்தை ஜனவரி 1, 2018-ம் ஆண்டு பிறந்தது. இருவேறு ஆண்டுகளில் பிறந்துள்ள ஆச்சர்யம் நிறைந்த குழந்தைகளின் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
மேலும் இதுகுறித்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் டாம்ஜிடி கூறுகையில், என்னுடைய 35 வருட மருத்துவ சேவையில் இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளை இப்போது தான் பார்க்கிறேன் என கூறியுள்ளார்.