பிறந்திருக்கும் இந்த புதிய வருடத்தில் (2018) சீனா ஆறு செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.இது எரிபொருள் சிக்கனமுடைய செயற்கைகோள்கள் எனவும், இதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் வணிகத்துறையின் இந்த ஆண்டுக்கான முன்னேற்றகரமான பாதை திறக்கப்படுவதாகவும், சீனாவின் ‘ஏரோஸ்பேஸ் சைன்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியல் கார்ப்’ (China Aerospace Science and Industry Corp) தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.இந்த செயற்கைகோள்கள் 2013ஆம் ஆண்டில் இருந்து உருவாக்கப்பட்டு வந்துள்ள நிலையில். இதன் ஆரம்ப செலவீனம் $5,000 எனவும், சர்வதேச அளவில் இந்த செலவீனம் குறைவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.