ஓரினச் சேர்க்கையாளர்கள்!! இலங்கை ஆய்வுகளில் அதிர்ச்சி!!

இலங்கையில் சுமார் 7500 ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.நாட்டில் 1.2 மில்லியன் பேரிடம் எச்.ஐ.வி தொற்று தொடர்பில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 280 பேருக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று உள்ளமையும், 7500 பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் என பல்வேறு தரப்பினருக்கும் எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்களே அதிகளவில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கின்றன.மேலும், கொழும்பு கம்பஹா காலி களுத்துறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.இதேவேளை, கடந்த 2013ஆம் ஆண்டு சுமார் 8500 ஓரினச் சேர்க்கையாளர்கள் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.