நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியலில் பிரவேசிக்கப் போவதாகவும், புதிதாக ஓர் அரசியல் கட்சியினை துவக்கி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும், கடந்த ஆண்டு தனது நடைபெற்ற தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வின் போது அறிவித்தார். ரஜினியின் அறிவிப்பினை தொடர்ந்து அவரது அரசியல் வருகையை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழரல்லாத ரஜினிகாந்த் தமிழகத்தினை ஆள நினைத்திடக் கூடாது என ரஜினியை மிக கடுமையாக எதிர்த்து வருகிற நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகர் ரஜினியையும், சீமானையும் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “ரஜினிக்கு அதிகளவில் ஆதரவு உள்ளது எனவும், உங்களுக்கு ஆதரவு இல்லை எனவும் கூறப்படுகிறதே” என்ற கேள்விக்கு “நூலகம் சிறிய அறையிலும், சிறை பெரிய பரப்பளவிலும் உள்ள காரணத்தினால் நூலகத்தை விடவும், சிறை மக்களுக்கானது என கருத முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.