கொழும்பை ஆக்கிரமிக்கும் சீனா!

சீன டராக்கன் நீர்முழ்கி கப்பலின். இலங்கை வருகையும் சுற்றிவழைக்கப்படும்கொழும்பில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் 60 மாடிகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களை அமைக்கும் மாபெரும் திட்டத்துக்கு சீனா முதலீடு செய்யவுள்ளது.

இந்த 60 மாடிகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களையும், வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீன துறைமுக நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் இந்த மூன்று கட்டிடங்களையும் அமைக்கும் என பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் திட்டமானது, இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனூடாக இந்து சமுத்திரத்தில் தமது செல்வாக்கை அதிகரிப்பதே சீனாவின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.