இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மொடல் காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன், கொடூர ஆயுதத்தால் அவரது கழுத்தை இரண்டாக துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட ஜோதி சிங் மும்பையில் செயல்பட்டுவரும் மதுபான விடுதிகளில் நடனக் கலைஞராகவும், மொடலாகும் இருந்து வருகிறார்.ஜோதி சிங் பணிபுரிந்து வந்த நடன பார்களில் வாடிக்கையாளராக இருந்த பிரதேஷ் பட்டேல் ஏற்கனவே திருமணமான நிலையிலும் இவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
நாளடைவில் இது காதலாக மாறவே இருவரும் அடிக்கடி பட்டேலின் குடியிருப்பு ஒன்றில் சந்தித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 27-ஆம் திகதி பட்டேலின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு திம்பா பகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்புக்கு ஜோதி சிங் சென்றுள்ளார்.அங்கிருந்து இருவரும் புத்தாண்டை மும்பையில் கொண்டாடும் பொருட்டு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் திம்பா திரும்பியுள்ளனர்.