மீண்டும் குழப்பம்!! இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்!!

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நாளையும் தொடரும் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருள்பிரகாசம் தெரிவித்தார்.‘வடக்கு மாகாண முதலமைச்சருடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுக்களில் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளோம். போராட்டத்தை விரிவுபடுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம்’ எனவும் அவர் கூறினார்.வட பிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் 3 நாள்களாக முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம்  நேற்றுப் பிற்பகலுடன் நிறைவடைவதாக முன்னர் அறிவுக்கப்பட்டது. இ.போ.சவின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து வந்து முதலமைச்சரிடன் நடத்திய பேச்சுககளின் பின்னரே அவ்வாறு அறிவிக்கப்பட்டது.எனினும், மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தப்படுமென ஒன்றிணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

வடக்கில் மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த தீய சக்திகள் முயற்சித்த வருவது ஒன்றும் புதிதல்ல. எனினும் தற்போது நடைபெறும் இபோச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயத்தை கொண்டிருக்கவில்லை என்பது வெளிச்சம். இவர்களையும் யாரோ பின்னால் இருந்து இயக்குவதாகவே தெரிகின்றது .வவுனியா பஸ் நிலையம் தொடர்பில் முதல்வர் விக்கினேஸ்வரன் எடுத்த நியாயமான முடிவை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் முதல்வருடன் மல்லுக்கட்டி நிற்பதாகவே தெரிகின்றது. பொதுமக்கள் குறித்த இவர்கள் கிஞ்சித்தும் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் என்ற போதிலும் தனியார் பேரூந்துகளில் பயணிகள் எந்தளவில் நடத்தப்படுகிறார்கள் என்பதும் நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆக, இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு விரைந்து முடிவு காண வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகின்றது. பயணிகளின் அவலங்களை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்…. ?