சமூக ஊடகத்தில் அரசியல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக தேர்தல்கள் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக, சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் பிரதேச செயலகத்திற்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக கிராம அலுவலர் சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில், கிளிநொச்சி மாவட்டத் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து இது தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரதேச செயலகத்திற்கு மீள அழைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.மேலும், இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.