மொரட்டுவையிலிருந்து கொழும்பு செல்லும் பேருந்துகளில் சூட்சுமமான முறையில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதியில் பயணிக்கும் தமிழ் மக்களிடம் இவ்வாறு கொள்ளையிடப்படுகின்றன.கும்பலாக சேர்ந்து செயற்படும் குழுவொன்று கொள்ளையில் ஈடுபட்டு வருவதாககண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நான்கு ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று பேருந்துகளில் பயணிக்கும் தமிழ் பயணிகளிடம் தமது கைவரிசையை காட்டுகின்றன.
ஒருவர் பெண்களின் நகைகள், பணப் பைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சிப்பார். மற்றவர்கள் அவரை கலைத்து பிடிப்பது போன்று அவரை தூரத்திச் சென்று அவர்களும் தலைமறைவாகி விடுவர்.இவ்வாறான சூட்சுமமான முறையில் பல்வேறு தடவைகள் பேருந்துகளில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளன.இந்தக் கொள்ளைக் கும்பலிடம் பல தமிழ் பெண்கள் தாலிக் கொடிகளை பறி கொடுத்ததாக வெள்ளவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பேருந்துகளில் பயணிக்கும் போது பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.