ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா, களத்திற்கு வந்த கமல்.!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்து தோல்வியுற்றார். அதே சமயம் ஆளும் அதிமுக வேட்பாளரான மதுசூதனனும் தோல்வியுற்றார்.

ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா ; மீண்டும் களத்திற்கு வந்த கமல்.!

தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளை தோற்கடித்து சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றிபெற்றது தமிழக அரசியல் களத்தில் பலத்த அதிர்வலைகளை கிளப்பியது. மேலும், தேர்தலில் வெற்றிகொள்வதற்காக அதிமுக வாக்காளர்களுக்கு சுமார் 120 கோடி பணம் வழங்கியதாகவும், தினகரனும் அதிகளவில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், வாக்குக்கு விலை பேசப்பட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் கமல். தனது அடுத்த திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் சிறிது காலம் அரசியல் கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.