பிரபல கர்நாடக இசைப்பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என்று பல்வேறு மொழிகளில் பாடியதன் மூலம் பத்ம பூசண், பாரத ரத்னா போன்ற பல முக்கிய விருதுகளை வாங்கி குவித்தவர் மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி.
இவர், இரண்டாம் தாரமாக சதாசிவம் என்பவரை திருமணம் செய்து கொண்டதால் முதல் மனைவிக்கு பிறந்த ராதா என்ற பெண் குழந்தை சுப்புலட்சுமியிடமே தான் வளர்ந்துள்ளார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் போன்றே ராதாவும் கர்நாடக இசை மற்றும் வீணை வாசிப்பதில் மிகச் சிறந்து விளங்கினார்.
84 வயதான ராதா, தனது வயது முதிர்வின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருடைய மகன்கள் அவரை கவனித்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னையிலுள்ள அவருடைய இல்லத்தில் நேற்று முன்தினம் இரவில் காலமான ராதாவின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வந்தனர்.