சனிப்பெயர்ச்சியை நினைத்து பயப்பட வேண்டாம்!

கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி இனிதே நடைபெற்றது. சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு வெற்றிகரமாக பெயர்ச்சியடைந்துள்ளார்.

large_saniswara2-36505நடந்து முடிந்த சனிப்பெயர்ச்சியை நினைத்து அச்சோ, கடவுளே அடுத்த இரண்டரை வருடத்திற்கு நமக்கு என்னென்ன சோதனைகள் நேருமோ…என்று யோசித்து தேவையற்ற பயம் கொள்ளாதீர்கள்.

முக்கியமாக ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு ராசிக்காரர்கள் பயப்படாதீர்கள். ஜோதிடர்கள் கூறும் ராசிபலன்கள் அனைத்துமே பொதுவானவைதான். உங்கள் ஜாதகப்படி மாறும். உங்கள் ஜாதகத்தில் லக்னம், தசாபுத்தி, சனியின் சாரம், ஷட்பலம், அஷ்டவர்க்க பரல்கள் என எவ்வளவோ உள்ளன. பொதுவான பலன்களை நினைத்து வீணாக குழப்பிக் கொள்ளாதீர்கள்.

ஏழரை சனியோ, அஷ்டம சனியோ, அர்த்தாஷ்டம சனியோ எது நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்… உங்களை நீங்கள் எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்ள வேண்டும். வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்யுங்கள் தப்பே இல்லை. கடின உழைப்பில் இருக்கும் யாரையும் சனிபகவான் சொந்தரவு செய்வதில்லையாம். ஆனால், சோம்பேறிகளை இரண்டு மடங்காகச் சோதிப்பாராம் சனிபகவான்.

உங்கள் கடமைகளை சரிவரச் செய்யுங்கள் – முடிந்த வரை முயலுங்கள் – சரியான நேரத்தை கடைப்பிடியுங்கள் – சோம்பேறித்தனத்தை விட்டொழியுங்கள் – எதிர்மறை கருத்துக்களை விதைப்பவர்களின் தொடர்புகளை துண்டியுங்கள் – குல தெய்வத்தை வணங்குங்கள் – முன்னோர்களை தினமும் வணங்குங்கள். இந்தப் பரிகாரங்களே போதுமானது.

உங்கள் மீது நீங்கள் முதலில் நம்பிக்கை வையுங்கள் – உங்களால் இந்தச் சனிப்பெயர்ச்சியை எதிர்கொள்ள முடியும் என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள்.