சபரிமலை யாத்திரியை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்த வேண்டும் என ஐயப்ப குருமார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளம் ஐயனார் கோவில்.
தவசிகுளம் , கணேசபுரம் தர்ம சாஸ்தா கோவில் போன்ற பல்வேறு இடங்களில் மண்டல பூஜைகள் நடைபெற்றிருந்தன.
இப்பூஜைகளின் போது பல்வேறு குருசாமிமார்கள் சபரிமலை யாத்திரியையினை புனித யாத்திரிகையாக இலங்கை அரசு அறிவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐயப்பன் விரதம் கார்த்திகை முதலாம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம்27ம் திகதியுடன் விரதம் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து உலகத்தில் உள்ள ஐயப்பசாமிமார்கள் சபரிமலைக்கான யாத்திரியை ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் இலங்கையை சேர்ந்த ஐயப்ப சாமிமார்கள் சபரிமலை யாத்திரிகையை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு செல்லும் சாமிகளிற்கான விசாக்கள் சுற்றுலா விசாக்களே இந்திய அரசினால் வழங்கப்படுகின்றது.
இதன் காரணமாக இவ்விசாக்களை பெறுவதில் பல இன்னல்களை ஐயப்பசாமிமார்களிற்கு எற்பட்டுள்ளது.
இவ்விசாக்களை பெறுவதில் ஏற்படும் இன்னல்கள் காரணமாக சில ஐப்ப சாமிமார்களிற்கான விசாக்கள் வழங்கப்படாமையால் சபரி மலை யாத்திரிகை செல்ல முடியாத நிலை கூட ஏற்படுகின்றது.
இதனை கருத்திற் கொண்டு இச்சபரிமலை யாத்திரிகையை புனித யாத்திரிகையாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற மகஜரினை பல ஐயப்பசாமிமார்கள், குருசாமிமார்களாலும், குருவின் குருவினாலும் இலங்கை அரசிடம் சென்ற வருடம் கையளிக்கப்பட்டது.
இருந்த போதும் இதுவரையும் இதற்கான எந்த அனுமதியையும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வில்லை.
இதேவேளை கடந்த சில நாட்களிற்கு முன்னர் தேசிய கலந்துரையாடல் அமைச்சரினால் ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக மாற்றுவதற்கான அமைச்சரவை பத்திரத்தை பாராளுமன்றததில் சமர்ப்பிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.