38 இலட்ச ரூபா பெறுமதியான ‘சுவைமிகு’ கௌரவம் சங்கா தம்பதியருக்கு!

இலங்கையின் உலகப் புகழ்பெற்ற நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தம்பதியருக்கு 38 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த உணவுக்குப் பின்னான சிற்றுண்டியை வழங்கி கௌரவித்திருக்கிறது நுவரெலியவின் கிராண்ட் ஹோட்டல்!

மேற்படி ஹோட்டலின் புகழ்பெற்ற உணவுக் கலை நிபுணர் விராஜ் ஜயரத்னவின் 25 ஆண்டு காலத் தொழில்சார் பூர்த்தியை முன்னிட்டும் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தச் சிற்றுண்டி தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்சிற்றுண்டியைத் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் பலவும் வெளிநாடுகளில் இருந்து விசேடமாகத் தருவிக்கப்பட்டதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இச்சிற்றுண்டியை அலங்கரிக்க, சிறு தாமரைக் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் மேல் விலையுயர்ந்த வைரக் கல் ஒன்று வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘மெரி மீ’ (Marry Me) என்று அழைக்கப்படும் இந்தச் சிற்றுண்டி, சிறு பல்லக்கில் எடுத்துவரப்பட்டு பாரம்பரிய முறைப்படி சங்கக்கார தம்பதியருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிறிஸ்தவ விவகார அலுவல்கள் மற்றும் சுற்றுலாப் பயணத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் கலந்துகொண்டார்.Capturebhfgn n