ரொறொன்ரோவில் மற்றுமொரு கடுமையான குளிர்?

2017ல் முடிந்த கடுங்குளிர் மீண்டும் இன்றிரவு கசப்பான வரவிற்கு வழி வகுத்துள்ளது.

648x415_employe-municipale-carrboro-etats-unisகனடா சுற்று சூழல் ஒரு விசேட வானிலை அறிக்கையை ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் மாகாணத்தின் பெருப்பகுதிகளிற்கு விடுத்துள்ளது. இன்று இரவு மிக விறைப்பான கடுங்குளிர் வெப்பநிலை குறிப்பிட்ட பகுதிகளை எதிர் நோக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு முதல் வெள்ளி வரையும் மீண்டும் வெள்ளி இரவு தொடக்கம் சனிக்கிழமை வரையும் பல இடங்களில் வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் 30ஆக காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அதி தீவிர குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல்; மற்றும் இரவு குளிர் காற்றுடன் கூடி -26 ஆக உணரப்படும் எனவும் குறைந்தது -22 C, ஆகும் எனினும் வெப்பநிலை குளிர் காற்றுடன் -33 ஆக உணரப்படும் என சுற்று சூழல் வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நகரில் உயர் வெப்பநிலை -17C ஆனால் -32 ஆக உணரப்படும்.

சனிக்கிழமை பகல் -17 ஊ ஆனால் இரவில்-19 C ஆக வீழ்ச்சி அடையும் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலை ஞாயிற்றுகிழமை முடிவிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ பெரும்பாக விமான நிலைய அதிகார சபை இன்று காலை, குளிர் கால நடவடிக்கைகள் வழக்கம் போல் உள்ளன எனவும் வடகிழக்கு யுனைரெட் மாநிலங்கள் மற்றும் கனடாவின் கிழக்கு பகுதிகள் பனிப்புயலினால் தாக்கப்பட்டிருப்பதால் சில தாமதங்கள் மற்றும் இரத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றது.