சென்னையில் திடீரென்று பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் நீண்டகாலமாக வைத்து வரும் குறைந்த பட்ச கோரிக்கைகளை கூட தமிழக அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும், தமிழக அரசு கால அவகாசம் கேட்டு நாட்களை தள்ளிப்போட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இழுபறியிலேயே இருந்தது.
பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாததால், போக்குவரத்து ஊழியர்கள் திடீரென்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தொடர்ந்து மதுரை, திருச்சியிலும் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைக்குத் திரும்புவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் நிகழ கூடும் என்பதால், பணிக்கு சென்றவர்கள் முன்கூட்டிய ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.