சவுதி அரேபியாவில் பிறந்து பத்து நாட்களே ஆன குழந்தையை செவிலியர்கள் படுத்திய பாடு தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் Taif பகுதியில் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. அங்கு பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
அப்போது அங்கு இருந்த மூன்று செவிலியர்கள் குழந்தை என்று கூட பாராமல் தலை மற்றும் கழுத்தை அழுத்தி சிரித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அந்த மூன்று செவிலியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சுகாதாரத் துறை விவகாரத் தொடர்பாளர் Abdulhadi Al-Rabie கூறுகையில், வீடியோவில் இருக்கும் செவிலியர்கள் யார் என்பது கண்டறியப்பட்டவுடன், அவர்கள் உடனடியாக பணி நீக்க செய்யப்பட்டனர்.
மேலும் அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி அவர்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.