தங்காலை – நலகம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருமண விருந்துபசார நிகழ்வொன்றின் போது இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் 15 பேரை தங்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, மோதலுடன் தொடர்புபட்டவர்கள் அவ்விடத்துக்கு வருகை தர பயன்படுத்திய ஒரு முச்சக்கர வண்டி, நான்கு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியதாக தென் பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் கைதானவர்கள் அனைவரும் தங்காலை நீதிவான் நீதிமன்ரில் ஆஜர்ச் எய்யப்ப்ட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நலகம பகுதியில் முஸ்லிம் திருமண வைபவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பழைய பகைமை ஒன்றினை முன்னிறுத்தி இரு குழுக்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏர்பட்டு அதி கை கலப்பாக மாறியுள்ளது.
இதன்போது இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே இந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.கே. ஜயலத் மற்றும் தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லக்சிரி கீதால் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகளை நடாத்திய தங்காலை பொலிஸார் 15 பேரை கைது செய்து விளக்கமரியலில் வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.