சின்னத்திரை தொகுப்பாளர்களிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி.
இவரது கலகலப்பான பேச்சு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம்.
அண்மையில், டிடி பார்ட்டியில் ஒரு இளைஞருடன் டான்ஸ் ஆடுவது போன்ற காணொளி வெளியாகியிருந்தது. குறித்த காணொளியை பார்வையிட்ட ரசிகர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
இது தான் டிடி தனது கணவரை விவாகரத்து செய்ய காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர் மத்தியிலும் நிலவியது.
எனினும், அதனை நிருபிக்கும் வகையில் இன்னொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஆனால், இது அனைத்தும் எந்த வகையில் உண்மை என்பது தெரியாது.
இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் நிச்சயம் டிடி தான் ஒரு பதில் வழங்க வேண்டும். இதனைதான் அவரின் ரசிகர்களும் எதிர்ப்பார்க்கின்றனர்.
இதேவேளை, கடந்த 2016ம் ஆண்டு டிடி குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே இந்த விவாகரத்து செய்யும் முடிவையும் அறிவித்திருந்தார்.
விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் டி.வி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் சினிமாக்களில் நடிப்பது, சுசிலீக்ஸ் சர்ச்சை, லேட் நைட் பார்ட்டிகளில் அதிகமாக கலந்து கொண்டது இவைதான் பிரிவிற்கு காரணம் என நெருங்கிய நண்பரிடம் ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு டிடி தான் பதில் வழங்க வேண்டும். வதந்திகள் வலம் வந்து கொண்டிருந்தாலும் எதுவும் நடக்காதது போலவே டிடி இருக்கின்றார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.