விடிவதற்குள் என்ன நிலையோ.? தமிழக அரசே விழி பிதுங்கி தவிப்பு..

போக்குவரத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான அரசு தரப்பு ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் முன்னறிவிப்பின்றி அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

large_dsc5964tamil-5122சென்னை கோயம்பேடு, வடபழனி, தியாகராயநகர், பாரிமுனை ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்க மறுத்து ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில், பயணிகளை இறக்கிவிடும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள்,பேருந்துகளை அரசு பணிமனைக்கு கொண்டுவந்து நிறுத்தி வருகின்றனர்.

நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகளை இயக்காமல், பேருந்து நிலைய வளாகத்திலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டுளளன.

கடலூர் பேருந்து நிலையத்திலும் பெரும்பாலான அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து அரசு பேருந்துகளும், பணிமனைக்கு திருப்பி கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழகம் எங்கும் இப்படி தொடர்ச்சியாக நிகழ்வுகள் அரங்கேறி வருவதால், பயணிகள் பாதி வழியில் இறங்கி நின்று கொண்டு தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாற்று வழி என்ன செய்வது என்று தெரியாமல், தமிழக அரசு விழி பிதுங்கி தவித்து கொண்டிருக்கிறது.