கஷ்டப்பட்டு வேலை செய்வதே மூன்று வேளை உணவிற்காக தான். சிலருக்கு சரியாக பசி எடுக்காது. அந்த வகையில் சரியான நேரத்தில் பசி எடுக்க இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள். சுக்கான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து சட்னி போல் செய்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து பசியின்மையை குறைந்து சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வீர்கள்.
மேலும், திப்பிலி மற்றும் துளசி விதை இரண்டையும் நன்கு போடி செய்து 1 டீ ஸ்பூன் எடுத்து நீரை சுடவைத்து தினமும் இரவு குடித்து வந்தால் பசியின்மை குறைந்து, பசி அதிகரிக்கும்.
கரு மிளகை பொடியாக்கி வடிகட்டி எடுத்து கொண்டு. தேனை மண் சட்டியில் ஊற்றி வெல்லத்தை இடித்து கிட்டிய பிறகு மிளகு தூளை இணைத்து, 5 கிராம் இளகலுடன் 2 அரிசி எடை காந்த செந்தூரத்தைக் குழைத்து காலை, மாலை என இரண்டு வேளை வீதம் 12 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.