மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுத்தாலோ, அடிக்கடி தலைசுற்றல் ஏற்பட்டாலோ வீட்டில் உள்ள பெரியவர்கள் பித்தம் அதிகரித்துவிட்டது என்று கூறுவார்கள். அந்த வகையில் இப்போது பித்தத்தை எவ்வாறு போக்குவது என்று பார்ப்போம். பித்த வாந்தி ஏற்பட்ட பிறகு நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை முழுவதையும் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
அதைத்தொடர்ந்து, செங்கரும்பு சாறு 100 மி.லி, எலுமிச்சை பழச்சாறு 30 மி.லி ஆகியவற்றையை நன்கு அரைத்த சீரக பொடியுடன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக பித்தம் குறையும்.
மேலும், ஒரு டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, மூன்று துளி பெருங்காயம், 1 மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அதனுடன் தேங்காய், தேவையான அளவு புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து துவையல் போல் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.