விரைவில் தீர்வு, வைத்தியர்களின் இடமாற்ற பிரச்சினைக்கு.!

வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பில் நிலவும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். தொடர்ச்சியாக நீண்ட காலமாக ஒரே பிரதேசத்தில் சேவை புரியும் வைத்தியர்கள் விரைவாக இடமாற்றம் செய்யப்படுவார்கள்.  வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பில் வைத்திய நியமன அதிகாரிகள் விரைவில் நியமனங்களை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள் என சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு தேசிய இரத்த வங்கியில் இன்று இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

rajitha-senaratne_8