வட ஐரோப்பாவை தாக்கிய எலனோர் புயல்!

ஐரோப்பாவின் வட பகுதிகளை தாக்கிய குளிர்கால எலனோர் புயலினால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த புயலின் தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் தாக்கத்தினால், பிரான்ஸ் அல்ப்ஸ் மலைத்தொடரில் ஒருவர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஸ்பெயினின் வடக்கு பாஸ்க் கடற்கரையில் பாரிய அலைகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த எலனோர் புயல் தற்போது ஐரோப்பாவின் வடக்கு பகுதிகளை தாக்கி வருகிறது.

இதன் காரணத்தினால், பிரான்ஸின் வட பகுதியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த புயல் பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியான குரோஷியா உள்ளிட்ட ஏனைய பிராந்தியங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட ஐரோப்பாவை தாக்கிய  எலனோர் புயல் - 3 பேர் பலி, மக்கள் அசெளகரியம்

வட ஐரோப்பாவை தாக்கிய  எலனோர் புயல் - 3 பேர் பலி, மக்கள் அசெளகரியம்