பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு அபராதத் தொகை விதித்த காலி நாகொட பொலிஸ் அதிகாரிகளை காலி மாவட்ட இராஜாங்க அமைச்சரொருவர் கடுமையாக திட்டியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த முதலாம் திகதி தனது மெய்பாதுகாவலர்களுடன் ஜீப் வண்டியில் வந்த இராஜாங்க அமைச்சர் நாகொட பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரிகளை திட்டியுள்ளார்
பொலிஸாரினால் அபராதத் தொகை விதிக்கப்பட்ட நபர் தன்னுடைய ஆதரவாளர் என்றும், தன்னுடைய கூட்டமொன்றிட்கு வரும்போதே பொலிஸார் அவருக்கு அபராதத் தொகை விதித்துள்ளதாகவும், இனிமேல் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் இராஜாங்க அமைச்சர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.