தைப்பொங்கல் வர்ஜீனியா மாநிலத்தில் திருவிழாவாக அறிவிப்பு (Video)

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நாளை மாநிலத்தின் திருவிழாவாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் மக்கள்தொகை, அவர்களால் பெறப்பட்ட உயர் கல்வித் திறன்கள், செல்வாக்கு, குறிப்பாக வர்ஜினியாவின் பொருளாதார செழிப்பு மற்றும், வொஷிங்டனில் உள்ள அரசியல் அதிகாரத்தின் அரங்குகளில் அமெரிக்க தமிழர்களின் தாக்கம் என்பனவற்றின் அடிப்படையிலேயே தைப்பொங்கல் பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.