அணு ஆயுத பொத்தான் உண்மையாகவே டிரம்பிடம் உள்ளதா?

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்-இடம் இருப்பதைவிடத் தம்மிடம் பெரிய அணு ஆயுதப் பொத்தான் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், அவரிடம் அப்படி ஒரு பொத்தான் உண்மையாகவே உள்ளதா?

trumpஅணு ஆயுதங்களை வெடிக்கச் செய்வது தொலைக்காட்சி நிகழ்ச்சியை மாற்றுவதுபோல் அல்ல. அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்வதில் பிஸ்கட்டுக்கும், கால்பந்துக்கும் என்ன வேலை?

‘அணு ஆயுத பொத்தான்’ என்பது பரவலாக அறியப்பட்டாலும், விடை மிகவும் தெளிவானது. டிரம்பிடம், அப்படி ஒன்று இல்லவே இல்லை.

அப்படியானால் அவரிடம் என்ன உள்ளது?

கடந்த ஆண்டு ஜனவரி 20 அன்று டிரம்ப் அதிபராகப் பதவியேற்றபோது, பதவிக்காலம் முடிந்த அதிபர் பராக் ஒபாமாவுடன், ஒரு பெட்டியுடன் வந்த ராணுவத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர், டிரம்ப் பதவியேற்றபின், டிரம்பின் அருகில் சென்று நின்றுகொண்டார்.

அந்தப் பெட்டி ‘நியூக்ளியர் ஃபுட்பால்’ (அணுசக்தி கால்பந்து) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா அணு ஆயுதத்தை ஏவ, அந்தப் பெட்டி தேவை. அது எப்பொழுதும் அதிபரின் அருகிலேயே இருக்கும்.

_99464742_cccefd3b-1ecb-4ee3-9378-5e4c9b17ce61  டிரம்பிடம் உண்மையாகவே அணு ஆயுத பொத்தான் உள்ளதா? 99464742 cccefd3b 1ecb 4ee3 9378 5e4c9b17ce61நியூக்ளியர் ஃபுட்பாலுடன் ஹெலிகாப்டர் ஒன்றில் ஏறும் யு.எஸ்.மரைன் வீரர் ஒருவர்

டிரம்ப் கோல்ப் விளையாடும்போது அந்தப் பெட்டியுடன் இருக்கும் உதவியாளரும், மைதானத்தை சுற்றி அவரையே பின்தொடர வேண்டும் என்று, கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் உளவுத் துறை அதிகாரி ஒருவர் சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.

அந்தக் கால்பந்தில் என்ன உள்ளது?

யாரேனும் அந்தப் பெட்டிக்குள் என்ன உள்ளது என்பதைப் பார்க்க நேர்ந்தால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். அதில் பொத்தானோ, கடிகாரமோ இருக்காது.

அதனுள் தகவல் தொடர்பு கருவிகளும், போர்த்திட்டங்கள் அடங்கிய சில ஏடுகளும் இருக்கும். விரைவாகத் திட்டமிடுவதற்கு ஏற்ற வகையில் அத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

திருப்பி தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள், “அரிதானவை, மிதமானவை, நன்கு செயல்படுத்தப்படுபவை,” என்று மூன்று வகையான இருக்கும் என்று வெள்ளை மாளிகை ராணுவ அலுவலகத்தின் முன்னாள் இயக்குநர், பில் கல்லி 1980ஆம் ஆண்டு கூறியிருந்தார்.

சரி. பிஸ்கட் என்பது என்ன?

அதிபர் எந்நேரமும் தன்னிடம் வைத்திருக்க வேண்டிய, சங்கேத மொழியைக் கொண்டிருக்கும் அட்டையே ‘பிஸ்கட்’ எனப்படும்.

அது நியூக்ளியர் ஃபுட்பாலுடன் தொடர்பற்றது. ஒருவேளை அணு ஆயுதத்தை பயன்படுத்த அதிபர் ராணுவத்துக்கு உத்தரவிடுகிறார் என்றால், பேசுவது அதிபர்தான் என்பதை ராணுவத்தினருக்கு புரிய வைப்பதற்கான சங்கேத வார்த்தைகளை அந்த பிஸ்கட் கொண்டிருக்கும்.

அந்த பிஸ்கட்டைப் பெற்றுக்கொண்ட உணர்வு எப்படி இருந்தது என்று ஏ.பி.சி நியூஸ் அவரிடம் கேட்டபோது, “அது எதற்கானது என்றும் எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர்கள் விளக்கியது ஒரு கவனம் நிறைந்த தருணமாக இருந்தது. ஒரு வகையில், அது மிகவும் அச்சத்தை உண்டாக்கியது,” என்று கூறினார் டிரம்ப்.

முன்னாள் ராணுவ அதிகாரியான ராபர்ட் பஸ் பேட்டர்சன், தனது கால் சட்டை பாக்கெட்டுக்குள் தனது கடன் அட்டைகளுடன் ஒன்றாக வைத்திருந்த அந்தபிஸ்கட்டை முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தொலைத்து விட்டதாகக் கூறினார்.

_99464749_gettyimages-609188250-1  டிரம்பிடம் உண்மையாகவே அணு ஆயுத பொத்தான் உள்ளதா? 99464749 gettyimages 609188250 1பில் கிளிண்டன்

மோனிகா லெவன்ஸ்கீ விவகாரம் வெடித்த நாளான்று, அதைச் சில மாதங்களாகத் தான் பார்க்கவில்லை என்று கிளிண்டன் ஒப்புக்கொண்டார் என்று பேட்டர்சன் கூறியிருந்தார்.

அதை கிளிண்டன் பல மாதங்கள் தொலைத்திருந்தார் என்று இன்னொரு மூத்த ராணுவ அதிகாரியான ஜெனரல் ஹக் ஷெல்டன் கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபர் அணு ஆயுத தாக்குதலை எவ்வாறு நடத்துவார்?

அமெரிக்காவில் அதிபர் பொறுப்பில் இருப்பவர் மட்டுமே அணு ஆயுதத் தாக்குதலைத் தொடங்க முடியும்.

பேசுவது தாம்தான் என்பதை, அமெரிக்காவின் உச்சபட்ச ராணுவ அதிகாரியான பாதுகாப்பு படைகளின் தலைவரிடம் அடையாளப்படுத்திய பின்னர், தாக்குதலுக்கு அவர் உத்தரவிடுவார்.

அந்த உத்தரவு நெப்ராஸ்காவில் உள்ள ஆஃப்பட் விமானத் தளத்தில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும், அமெரிக்க ஸ்ட்ரேட்டஜிக் கமேண்ட் அலுவலத்துக்கு அந்த உத்தரவு அனுப்பப்படும். பின்னர், செயல்படுத்துபவர்களிடம் சங்கேத மொழிகள் மூலம் அந்த உத்தரவு அனுப்பி வைக்கப்படும்.

அதிபரின் உத்தரவை அவமதிக்கலாமா?

அமெரிக்காவின் அனைத்து பாதுகாப்பபு படைகளுக்கும் தலைமைத் தளபதி அதிபர்தான். சுருக்கமாகச் சொன்னால், அவர் என்ன சொல்கிறாரோ அது செயல்படுத்தப்படும். எனினும், அவரது உத்தரவுகள் செயல்படுத்தப்படாமல் இருக்கவும் சில வாய்ப்புகள் உண்டு.

கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக, அணு ஆயுதத் தாக்குதல் நடத்த அதிபருக்கு இருக்கும் அதிகாரங்களை, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் மறு பரிசீலனைசெய்தது.

_99464747_gettyimages-874130458  டிரம்பிடம் உண்மையாகவே அணு ஆயுத பொத்தான் உள்ளதா? 99464747 gettyimages 874130458ராபர்ட் கேலர்

அமெரிக்க ஸ்ட்ரேட்டஜிக் கமேண்ட்-இன் முன்னாள் தலைவரான ராபர்ட் கேலர், அதிபரின் உத்தரவு சட்டபூர்வமானதாக இருந்தால் மட்டுமே தான் அதை செயல்படுத்துவேன் என்று காங்கிரஸ் குழுவிடம் கூறினார்.

சில சூழ்நிலைகளில், “நான் இதை மேற்கொண்டு செயல்படுத்த தயாராக இல்லை,” என்று கூறியிருப்பேன் என்றார் அவர்.

அதன் பின்னர் என்ன நடக்கும் என்று ஒரு உறுப்பினர் கேட்க, “அது எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார் கேலர்.

இந்த பதிலுக்கு குழுவினர் அனைவரும் சிரித்தனர்.