உகண்டாவில் நபர் ஒருவர் ஒரே நாளில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஷிமண்டா என்பவருக்கும், சல்மட் என்ற பெண்ணுக்கும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஜமோ நகாயிஷா (27) மற்றும் மஸ்துலா (24) என்ற பெண்களையும் ஷிமண்டா திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
இருவரும் சகோதரிகள் ஆவார்கள், அதே நேரத்தில் தனது முதல் மனைவி சல்மட்டை மீண்டும் மணக்க விரும்பிய ஷிமண்டா மூவரையும் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டுள்ளார்
தனித்தனியாக திருமணம் செய்தால் செலவு அதிகமாகும் என்பதால் இப்படி மூவரையும் ஒன்றாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஷிமண்டா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜமோ கூறுகையில், எங்களை ஷிமண்டா ஒன்றாக திருமணம் செய்தது எங்களுக்குள் எந்தவொரு பாகுபாடும் இல்லை என்பதற்கான அறிகுறி, கணவரை பங்கிட்டு கொள்வதில் எங்களுக்கு வருத்தமில்லை என கூறியுள்ளார்.
உகண்டாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்வது சட்டபடி தவறில்லை என்பது குறிப்பிடத்தக்கது