நீதிபதியின் கோபத்தால் வியர்த்துக்கொட்டிய லாலு!!

ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், நேற்று அவருக்குத் தண்டனை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இறந்துபோன இரு வழக்கறிஞர்களுக்கு இரங்கல் தெரிவித்து, நீதிமன்ற நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.

Capturegn vgfnh fcjfமுன்னதாக, நீதிமன்ற அறையில் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களை வெளியேறுமாறு கூறிய நீதிபதி சிவபால் சிங், லாலுவைப் பார்த்து, ”உங்களுக்காகப் பரிந்துரைத்து, உங்கள் நல விரும்பிகளிடமிருந்து ஏராளமான போன் அழைப்புகள் வந்தன. ஆனால், சட்டம் தன் கடமையைச் செய்யும். நான் சட்டத்தைப் பின்பற்றுபவன்” என்றார்.

நீதிபதியிடமிருந்து இத்தகைய வார்த்தைகளை எதிர்பார்த்திராத லாலுவின் முகத்தில் ஈயாடவில்லை. ஆனால், தனக்கு யார் யார் போன் செய்தார்கள் என்ற விவரத்தை நீதிபதி வெளியிடவில்லை.

நீதிபதியிடம் லாலு, சிறையில் குளிர் அதிகமாக இருப்பதாகவும் தன்னை   சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை எனக் குறைகூறினார். ”நீங்கள்தான் நீதிமன்றத்துக்கு வரும்போது பலரை சந்திக்கிறீர்களே… சிறை அறை அதிகமாகக் குளிர்கிறது என்றால், தபேலா அல்லது ஆர்மோனியம் வாசித்துக்கொண்டு இருங்கள்” என்று நீதிபதி பதில் அளிக்க,  லாலுவுக்கு குளிரையும் மீறி வியர்த்துக்கொட்டியது.

`நான் ஒன்றும் அறியாதவன். இந்த வழக்கில் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை’ என்று நீதிபதியிடம் லாலு மீண்டும் கூறினார். ‘நீங்கள்தான் அப்போது பீகார் முதல்வர்.

அதோடு, நிதித்துறை உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. நேரத்துக்கு ஏற்றாற்போல நடிக்க வேண்டாம். உங்களுக்கு இன்று நான் தண்டனை அளிக்கப்போவதில்லை நீங்கள் போகலாம்’ என்று பதில் கூறினார்.

`சார்… நானும் ஒரு வழக்கறிஞர்தான் என்று நீதிபதியிடம் லாலு கூற, `அப்படியென்றால் சிறையில் படித்து பட்டம் வாங்கினீர்களா’ என நீதிபதி வெடித்தார்.

சார்… அமைதியாகச் சிந்தித்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று லாலு சொன்னபோதுதான், தனக்கு போன் அழைப்புகள் வந்த விவரங்களை நீதிபதி வெளிப்படையாகச் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு வந்தார்.

தியோஹர் மாவட்ட கருவூலத்திலிருந்து ரூ.84.5 லட்சத்தை முறைகேடாக எடுத்த வழக்கில், தான் பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

விசாரணைக் காலத்தின்போது 11 பேர் இறந்துவிட, ஒருவர் அப்ரூவர் ஆனார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் எனக் கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி நீதிபதி சிவபால் சிங் அறிவித்தார்.

பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா உட்பட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில், லாலுவுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம். 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், ஏற்கெனவே சிறையில் இருந்த நாள்களைக் கணக்கில்கொண்டு லாலு, விரைவில் விடுதலை ஆகிவிடுவார்.

லாலு 70 வயது நிரம்பியவர். அவருக்கு பல நோய்கள் உள்ளன. எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி அவரின் வழக்கறிஞர் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.