இலங்கை அகதிகள் முகாமில் பறவைக்காவடி விழா! – (வீடியோ)

தமிழகம் – ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் முருக பக்தர்களின் 23ஆம் பறவைக்காவடி விழா கோலாகலமாக அண்மையில் இடம்பெற்றது.

பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பறவைக்காவடி விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அந்த முகாமில் பறவைக்காவடி விழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்த பறவைக்காவடி விழாவின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான பவனியில் வந்தார். இதனையடுத்து முகாமில் இருக்கும் நாகம்பாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.