திருகோணமலை துறைமுகத்தை விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மேற்படி அமைச்சின் செயலாளர், மொறகஹந்தை விவசாய நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து இன்று விளக்கமளித்தார். இதன்போது நடைபெற்ற செய்தியாளருடனான சந்திப்பில் பொலனறுவையிலிருந்து திருகோணமலையை ஒரு மணித்தியாலத்திற்குள் சென்றடையக்கூடியதாக நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்பட்டுவருவதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், “வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை அனர்த்தத்தின் காரணமாக எதிர்பாராத விதத்தில் அரிசிக்கான தட்டுப்பாட்டை நாம் எதிர்கொண்டோம். புதிய இந்த மொறகஹந்தை திட்டத்தின்மூலம் நெல் உற்பத்தியை போன்று பாரம்பரிய பழம் உற்பத்தியும் இரண்டுமடங்காக அதிகரிக்கும்.” என்று மேலும் தெரிவித்தார்.