சுவிற்சர்லாந்தில் பனிப்பாறை சரிவு ஏற்படும் அபாயம்!

Buglind புயலால் சுவிஸ் மலைகளில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் புயல் காற்றினால் பனிப்பாறை சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

bhgகடந்த மூன்று நாட்களில் சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில் மட்டும் ஒரு மீட்டர் உயரத்திற்கும் அல்பஸ் மலைத்தொடரின் வடபகுதியில் அரை மீட்டர் உயரத்திற்கும் பனி பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த புதன்கிழமை அன்று சுவிட்சர்லாந்தை தாக்கிய Buglind புயலால் பனி அடுக்குகள் நகர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப் பனி பொழிவின் காரணமாக மேலும் 2000 மீட்டர் உயரத்திற்கு பனி உயரும் இதன் காரணமாக தாழ்வு இடங்களில் பனியுடன் அதிக மழை நீர் கலப்பதால் பனியானது நகரக்கூடும். இதனால் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பல பகுதிகளில் பனிப்பாறை சரிவுகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Buglind புயலால் சூரிச் விமான நிலையத்தில் சுமார் 70 விமானங்களின் புறப்பாடுகளும் வருகையும் பாதிக்கப்பட்டதுடன் புகையிரத சேவையும் வெகுவான பாதிப்பு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

nepal3