பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வரும் அவுஸ்ரேலியாவை சேர்ந்த James Geale தனது காதலியை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் நாடு கடத்தப்படவுள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது, கடவுச்சீட்டு விண்ணப்பிப்பதில் தவறான திகதியை குறிப்பிட்டுள்ள காரணத்தினாலேயே அவர் நாடு கடத்தப்படவுள்ளார் என The Croydon Advertiser பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேம்ஸ் தன்னுடைய கடவுச்சீட்டை கடந்த வருடம் ஜூலை மாதம் புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதனை ஆகஸ்ட் 12 என தவறாக கருதியமையால் இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிரித்தானிய பிரஜையாகிய தனது காதலியை திருமணம் செய்தால் Spouse Visa பெறலாம் என எண்ணி திருமணபதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் திருமண பதிவிற்கு அங்கும் கடவுச்சீட்டு நகல் தேவைப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜேம்ஸ் குறித்த காலத்திற்குள் விண்ணப்பிக்காததால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கும் உள்துறை அலுவலர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய விண்ணப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.