மனைவியை அரை நிர்வாணமாக்கி தெருவில் நடக்க வைத்த கணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் Harlem பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் Jasson Melo என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது மனைவியின் தொலைபேசிக்கு குறுந்தகவல்கள் தொடர்ந்து வந்துள்ளது. இதனால் மனைவியை சந்தேகப்ட்ட கணவன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் பெரிதாக Jasson Melo அடுக்குமாடி குடியிருப்பு என்பதைகூட பொருட்படுத்தாமல் தனது மனைவியை அரை நிர்வாணமாக்கி உறை பனியில் தெருவில் நடக்க விட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்ததுடன் மனைவியின் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் பொலிசார் அவரை கைது செய்து வழக்கு தாக்கல் செய்தனர். தற்போது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ள வழக்கை விசாரித்த நீதிபதி Jasson Melo-விற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் Jasson Melo-வின் மனைவி நீதிமன்றிற்கு வராத நிலையில் தனது வழக்கறிஞரிடம் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். அதில் தனது கணவரின் செயல் விபரிக்க முடியாத பெரும் துயரம் என்று குறிப்பிட்டுள்ளார்.