ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் ஐவர் பலி!

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எலினோர் புயல் தாக்கம் காரணமாக இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நேற்று வியாழக்கிழமை(04.01.2018) பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலை பசிச்சரிவில் சிக்கி, இதுவரை ஐவர் பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலினோர் புயல்  தாக்கம் - ஆல்ப்ஸ் மலை பசிச்சரிவில் ஐவர் பலி!

அத்துடன் பிரான்ஸ் வடக்கு கடலை அண்மித்த பகுதிகளில் எலினோர் புயலின் தாக்கம் அதிக அளவில் உணரப்பட்டது.
மேலும், வடக்கு அயர்லாந்திலும், இங்கிலாந்தின் மேற்கில் பகுதிகள் மற்றும் வேல்ஸ் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எலினோர் புயலின் தாக்கத்தினால், காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் குறித்த பிரதேசங்களில் உள்ள பாலங்கள் வீதிகள் மூடப்பட்டன. சில பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, வீடுகள், அலுவலகங்கள் இருளில் மூழ்கின. சில இடங்களில், கடல் சீற்றம் காரணமாக, அப் பகுதிகளில் அமைந்துள்ள நகரங்களின் வீதிகளில் கடல் நீர் புகுந்தது.
இதேவேளை, அயர்லாந்தின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.