இந்தியாவின் ஐ.பி.எல் போட்டியின் அதிக விலைக்கு பெறப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஜனவரி 27 மற்றும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைக்க முடியும் எனவும் 2 வீரர்களை மறைமுகமாக தக்க வைத்து ஏலத்தில் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டு நேற்றைய தினம் தக்க வைக்கும் வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஒவ்வொரு அணியும் ரூபா 80 கோடி செலவு செய்து வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் எனவும், இதில் ரூபா 33 கோடி தக்க வைத்துள்ள வீரர்களுக்காக அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் தக்க வைத்த வீரர்களில் அதிகூடிய விலைக்கு பெறப்பட்ட வீரர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் முதலாம் இடத்தில் ரூபா 17 கோடி விலைக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ளார்.ஐ.பி.எல் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக 17 கோடி ஒப்பந்தத்தில் வீரரொருவர் தக்க வைக்கப்பட்டுள்ளதாக காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை அணி டோனியை 15 கோடி ஒப்பந்தத்திலும், சுரேஸ் ரெய்னாவை 11 கோடி ஒப்பந்தத்திலும், ஜடேஜாவை 7 கோடி ஒப்பந்தத்திலும் தக்க வைத்துள்ளது. மேலும் மும்பை இந்தியன் அணி ரோஹித் சர்மாவை 11 போடி ஒப்பந்தத்திலும், ஹார்த்திக் பாண்ட்யாவை 11 கோடி ஒப்பந்தத்திலும், பும்ராவை 7 கோடி ஒப்பந்தத்திலும் தக்க வைத்துள்ளது. மேலும் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டிவில்யர்ஸை 11 கோடி ஒப்பந்தத்திலும், ஐதராபாத் அணி டேவிட் வார்னரை 12 கோடி ஒப்பந்தத்திலும் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.