கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர் ஒருவர் பொய் முறைப்பாடு செய்தமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி ராஜகிராமத்தை சேர்ந்த குமார் என அழைக்கப்படும் உள்ளூராட்சிமன்ற வேட்பாளரே இந்த நாடகம் ஆடினார்.
தன்னை இனம்தெரியாதவர்கள் தாக்கி, மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றதாக நெல்லியடி பொலிசாரிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து, பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இது பொய் முறைப்பாடென்பது தெரியவந்தது.
தனக்குதானே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதை அவரது மனைவி உறுதிசெய்ததுடன், தீப்பெட்டி கேட்டு பக்கத்து வீட்டுக்கு வந்ததும் உறுதியாகியது.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தினர். ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
மனைவியே இவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கின்றார் என்றால் அவருக்கு மனைவியே வாக்குப் போடுவாரா?? என அப்பகுதி பொதுமக்கள் கேட்கின்றனர்.