கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் எந்தவொரு பிரிவிலும் சித்திபெற்ற மாணவர்களை தாதிய சேவைக்குள் உள்வாங்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறித்த மாணவர்களை உள்வாங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது
தாதிய சேவையில் நிலவும் வெற்றிடங்களின் காரணமாக மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மட்டுமல்லாது கொழும்பு மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளிலும் தாதியர்கள் பற்றாக்குறை அதிகளவில் நிலவுகிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் கொழும்பு மாவட்டத்திலுமுள்ள மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கு தாதியர்கள் குறைந்தளவான முக்கியத்துவத்தை வழங்குவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.